கோவையில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்புக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19-30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா கோவில், மெக்ரிகர் சாலை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும். மாத 20 ரூபாய் வழங்கப்படும். அதேபோல், டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 24 - 35 வயதிற்குள்ளும், 162.5 செ.மீ., உயரத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள நேர் ஊதியமாக 16 ஆயிரத்து காணல், சாலை விதிகள் தொடர்பான தேர்வு, கண் பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். மாத ஊதியமாக 15 ஆயிரத்து 820 ரூபாய் வழங்கப்படும்.

நேர்முக தேர்வுக்கு வருவோர் அசல் மற்றும் நகல் கல்வித் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...