உடுமலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மங்கள வாத்தியத்துடன் தீர்த்த குடங்களுக்கு தலைமை தாங்கி சக்தி கலசம் செல்ல அதற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரண்டு கைகள் மற்றும் முதுகில் கத்தி போட்ட படி ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் சக்தி கலசம் எடுத்தல் மற்றும் கத்தி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பூமாலை சந்தில் உள்ள செளவுண்டம்மன் கோவிலில் இருந்து இதற்கான ஊர்வலம் தொடங்கியது. மங்கள வாத்தியத்துடன் தீர்த்த குடங்களுக்கு தலைமை தாங்கி சக்தி கலசம் செல்ல அதற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரண்டு கைகள் மற்றும் முதுகில் கத்தி போட்ட படி சென்றனர். ஊர்வலமானது சீனிவாசா வீதி, பசுபதி வீதி, தளிரோடு, பெரிய கடை வீதி வழியாக மாரியம்மன் கோவிலை அடைந்தது.



அதன் பின்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சக்தி கலசமானது ஒற்றை வாழைப்பழத்தில் எந்த விதமான ஆதரவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை சென்றடைந்தது பக்தர்கள் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த நிகழ்வில் தேவாங்கர் சமுதாய தலைவர் மாணிக்கம், செயலாளர் திருமலைசாமி, தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் சினிவாசன், கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...