உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


திருப்பூர்: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்து, கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொத்து கொத்தாக இறந்தன. அதைத் தொடர்ந்து வாத்துகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் தாக்குதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழக - கேரளா எல்லைகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.



கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கோழி இறைச்சி, முட்டை, கோழி தீவனம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கோழி பண்ணைகளில் கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது எதிர்பாராமல் அதிக அளவு கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது பறவை காய்ச்சல் நோய் கட்டுக்குள் வரும் வரை மேற்கொள்ளப்படும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த பணிகளை திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் புகழேந்தி ஆய்வு செய்தார். உடன் உடுமலை உதவி இயக்குனர் ஜெயராம், கால்நடை மருத்துவர்கள் ராஜ சொக்கப்பன், அப்துல் கலாம் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...