காற்று வெளியிடை: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கார்த்தி- அதிதீ ராவ் நடிப்பில் வெளிவர இருக்கும் காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 

ஆடியன்ஸின் பல்ஸை நன்கு அறிந்த இயக்குனர் மணிரத்னம், காற்று வெளியிடையின் 'பர்ஸ்ட் லுக்' தொடங்கி பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வரை அனைத்தையும் சுவாரஸ்யமான முறையியல் வழங்கியுள்ளார். 



படத்தில் கார்த்தி மற்றும் அதிதீ-யின் கேரக்ட்டர்கள் என்ன? என்பது ட்ரெய்லர் பார்த்த பின் கொஞ்சம் தெரிந்திருக்கும். இந்த நிலையில், கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காற்று வெளியிடை படத்தின் சில சாராம்சங்களை நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை 'ப்ரூக் பீல்ட்ஸ்' வணிக வளாகத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதீ ராவ் இன்று பகல் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கார்த்தி கூறியதாவது:-

பத்து வருடங்களுக்கு முன்பு நான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று அவரது படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்து வருகிறது. காற்று வெளியிடை படத்தில் என்னை வேறு ஒருவனாக மாற்றிவிட்டார். அவரிடம் கேட்டுள்ளேன், 'உதவி இயக்குனராக இருந்தபோது என்னை திட்டியுள்ளீர்கள். ஆனால், உங்கள் படத்தில் நடிக்கும் நடிகனை நீங்கள் திட்டவே இல்லையே' என்று. 

தொடர்ந்து, அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். படத்தின் ஒரு காட்சியில் சின்னதாக சிரித்தேன். அப்போது மணிரத்னம் என்னை அழைத்தார். 'இந்த படத்தில் கார்த்தி வரக்கூடாது. வருண் தான் எனக்கு வேண்டும்' என்றார். ஆம், படத்தில் என் பெயர் வருண். 

காற்று வெளியிடை

ரோஜா, பாம்பே போன்று காற்று வெளியிடை படத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இல்லை. இப்படம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் படம் இல்லை. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டுள்ளது. 



படத்தில் நான் போர் விமானியாக நடித்துள்ளேன். நாம் எத்தனையோ கேரக்ட்டர்களை திரைப்படத்தின் வாயிலாக பார்த்திருப்போம். ஆனால், போர் விமானியின் வாழ்க்கையில் நடப்பவை குறித்து அறிந்திருக்க மாட்டோம். 

மணிரத்னத்தின் மற்ற பட ஹீரோக்களை போல வருண் மிருதுவானவன் கிடையாது. ஒரு ராணுவ அதிகாரி என்பதால் சற்று மூர்க்கத்தனமான கதாபாத்திரம். காதலையும் அவ்வாறே வெளிப்படுத்துவான். 



படத்தின் காட்சிகள் லடாக், ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் தான் படமாக்கப்பட்டுள்ளது. ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை வீட்டின் அறையிலேயே படமாக்கப்பட்டது. ஆனால், காற்று வெளியிடை திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் பத்து வருடங்களுக்கு பிறகு பார்த்தாலும் சலிப்புத்தன்மை ஏற்படுத்தாதவாறு இருக்கும். 



அடுத்ததாக உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தொடர்ந்து, கொம்பன் படத்தை போல கிராமத்து படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு கார்த்தி கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...