முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் சத்குரு வாக்களிப்பு

முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். ஈஷா யோக மையத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரிகளும் தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர்.


கோவை: கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதே போன்று ஈஷா யோக மையத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரிகள் தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர்.



அவர்களுடன் ஈஷா முழு நேர தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஈஷாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். முன்னதாக தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த சத்குரு,"நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...