கோவையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு - மீறினால் 2 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த நிலையில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்களுக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும்.

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது.

தேர்தல் முகவர் ஒரு வாகனத்திலும், கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் தற்காலிக கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கு இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம். எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம், ரோடியோ, வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...