இந்தியா கூட்டணியினர் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்தால் விட்டு விடுவீர்களா? - கோவையில் ஜவாஹிருல்லா கேள்வி

வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் அரசியலமைப்பு சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தேர்தல் பரப்புரையின் போது காண முடிகிறது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளரர்களுக்கு இன்று (ஏப்ரல்.15) பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாகஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார்.

வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தேர்தல் பரப்புரையின் போது காண முடிகிறது என தெரிவித்தார். நேற்றைய தினம் பாஜகவின் சார்பில் சங்கல்பத்ரா என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், அதனை படித்துப் பார்க்கும் பொழுது அது சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது என்று குறிப்பிடலாம் என்றார்.

2019 ஆம் ஆண்டு பாஜக கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும், 2014ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம் 20 லட்சம் ரூபாய் வரைஇந்தியர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாஜகவினர் கூறியதாக தெரிவித்தார். மேலும் தற்பொழுது உள்ள உள்துறை அமைச்சர் அப்போது தேர்தல் நேரத்தில் பேசியதை எல்லாம் ஏன் இவ்வாறு சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்கிறார் என தெரிவித்தார்.பாஜக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறினார். மேலும் பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது எனவும், மக்களை ஏமாற்றும் தந்திரமாக உள்ளது எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் அறிக்கை நடைமுறையில் சாத்தியமாக இருக்க கூடியவையாக உள்ளது எனவும், காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமான அறிக்கை பாஜக அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது என்றார். கோவை, பொள்ளாச்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும் பாஜகவினர் எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்து கொண்டு பல்வேறு காரியங்களை செய்யக்கூடியவர்கள் எனவும், தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும் என தெரிவித்தார். இரவு 10 மணிக்கு மேல் மைக்கையும், லைட்டையும் உபயோகிக்க கூடாது, 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வது சட்ட மீறல். இதனை இந்தியா கூட்டணியினர் செய்தால் விட்டு விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...