கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம்

வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் பின் பற்ற வேண்டிய வீதி முறைகள்,போட்டியிடும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கான பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...