தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவர்கள் அடங்கிய 'டீம் எபெக்ஸ் கிளப்' அணி, ஈரோடு வெள்ளாளர் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 'ரெவோரா-26' நிட்ரோ ஆர்.சி. ரேஸிங் தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் இரண்டாமிடம் பிடித்தது. 20 என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கிளப்புகளைச் சேர்ந்த 30 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், ரோஹித், சூர்யா, ராஜகணபதி, அபிலாஷ், தானேஸ்வரன், ரெனிசன் ஆகியோர் அடங்கிய அணி பரிசுக் கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசு வென்றது.


Coimbatore: கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.இ., மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் அடங்கிய 'டீம் எபெக்ஸ் கிளப்' அணியினர், தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் இரண்டாமிடம் பிடித்து பரிசுக் கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசு வென்றுள்ளனர்.

என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் சார்ந்த துறைகளிடையே, சிறிய ரக ரேஸ் கார்களுக்கு இடையிலான பந்தயம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்கள் இந்த வகை ரேஸ் கார் பந்தயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சிறிய ரக ரேஸ் கார்கள், ரேஸ் கார்களைப் போலவே இயங்கக் கூடியவை. என்ஜின் பொறுத்தப்பட்டு, நிட்ரோ எத்தனால் எரிபொருளில் இயங்கக் கூடியவை. 3.5 சி.சி., திறன் கொண்டவை. இவை கார் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவதைப் போன்றே பந்தய ஓடுதளங்களில், ரிமோட்டின் உதவியுடன் இயக்கப்பட்டு முந்தி வரும் கார்கள் முதல் மூன்று பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஈரோடு வெள்ளாளர் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை சார்பில், மெக்கானிக்கல் என்ஜினீயர்ஸ் அசோசியேசன், எஸ்.ஏ.இ., இன்டியா கிளப் நடத்திய 'ரெவோரா-26' நிட்ரோ ஆர்.சி. ரேஸிங் என்ற தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயம் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் 20 என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் சிறிய ரக கார் பந்தய கிளப்புகளைச் சேர்ந்த 30 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 'டீம் எபெக்ஸ் கிளப்' மாணவர்கள் ரோஹித், சூர்யா, ராஜகணபதி, அபிலாஷ், தானேஸ்வரன், ரெனிசன் ஆகியோர் அடங்கிய அணியினர் இரண்டாமிடம் பிடித்து, பரிசுக் கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசு வென்றனர்.

ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் டி.ஈ. சுஜாதா, செயலாளர் டி.ஈ. அஜித், தாளாளர் டி.ஈ. ஆதர்ஷ் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். இதேபோல் முதல்வர் இசட். ராபர்ட் கென்னடி, துறைத்தலைவர் ராஜேஷ் ரூபன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களைப் பாராட்டினர்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...