கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், சாலைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கோவை: கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் S. வேணுகோபால் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார். செயலாளர் M. தேவேந்திரன் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் T.R. ரவீந்திரன் வரவு-செலவு கணக்கையும் தாக்கல் செய்தனர்.



முன்னாள் நீதியரசர் S.P. ரிஷிவரதன், V. செங்கடேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் கோட்டப் பொறியாளர் G. மனுநீதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பில் தனிமனித ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர்கள், தமிழ்நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், கோவையில் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்து அபாயம் அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர். போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டும் விபத்துகள் குறையவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கூட்டத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள், நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகி நல்லகண்ணு, இயக்குநர்கள் பாரதிராஜா, நடிகர் பாக்கியராஜ், பாடகி வாணி ஜெயராம், பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சாலையோரக் கடைகள் மற்றும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுவதாக சங்கம் தெரிவித்தது. இதனால் கோவை மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் ஆட்டோ, டாக்சிகளை சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ரயில்வே துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் இருந்தும் ஏறுமிடங்கள், இறங்குமிடங்களில் நெரிசல் ஏற்படுவதாக சங்கம் தெரிவித்தது. சேரன் நகர், ஐ.டி.ஐ., வெள்ளக்கிணறு பிரிவு பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

துடியலூர் வட்டச்சாலை பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பேருந்து நிலையம் வர உள்ளதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 500 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு “யூ-டர்ன்கள்” வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால், அவற்றுக்கு இடையே உரிய இடைவெளி கடைப்பிடிக்கவும், பேருந்து நிறுத்தத்தை 50 மீட்டர் தள்ளி மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை பணிகள் முடிந்தவுடன் முறையாக மூட வேண்டும் என்றும், மழைக்காலத்தில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் குழிகளுக்கு எதிராக கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்தது.

கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி முதல் காந்திபுரம் வரையிலான பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், கோவை-சரவணம்பட்டி இடையிலான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் கோவை-அவிநாசி மற்றும் கோவை-திருச்சி சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என சங்கம் தெரிவித்தது. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் குறுகியதாக இருப்பதால் வாகனங்கள் ஓவர்டேக் செய்ய முயல்வது விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்டமிடல் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...