காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகன் நந்தகுமார் (24). பட்டதாரியான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நந்தகுமாரும், சுஜி என்ற பெண்ணும் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக சுஜி, நந்தகுமாருடன் பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நந்தகுமார் இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நந்தகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...