கோவையில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளியில் இன்று (மார்ச்.18) காலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. அப்போது, அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையினரின் ஆய்வில் அது புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் அல்வேர்னியா மெட்ரிக் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், காலை நேரங்களில் தேர்வுகளும், மதிய நேரங்களில் மற்ற மாணவிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (மார்ச்.18) காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனிடையே அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு இல்லை என்பதும், பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் காவல் துறையினரும், பள்ளி நிர்வாகத்தினரும் நிம்மதி அடைந்தனர். தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மதியத்திற்கு பிறகு மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டன. காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது, ”வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பள்ளி வளாகத்தில் சோதனை செய்தோம். அதில் அந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. யாரும் அச்சப்பட தேவையில்லை” எனத் தெரிவித்தனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளி முன்பாக திரண்டனர். அப்போது எங்களது குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி, பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பதால் அச்சப்பட தேவையில்லை என சமாதானப்படுத்தினர். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...