கோவை லங்கா கார்னர் பகுதியில் பச்சை துணி மூலம் போஸ்டர் ஒட்டும் இடங்கள் மறைப்பு

கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாக கூறி போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் மறைத்து வைத்துள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகளில் போஸ்டர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்சிகள் போஸ்டர் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புகளையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரைப் பொறுத்தவரை லங்கா கார்னர், நஞ்சப்பா சாலை, கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக லங்கா கார்னர் பகுதி என்பது ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் செல்லும் பகுதியின் முக்கிய சந்திப்பு என்பதால் இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் பார்வைக்கு எளிதில் சென்றடையும்.

இந்நிலையில் இன்று (மார்ச்.14) மாநகராட்சியினர், லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாகவும், இதனால் போஸ்டர்கள் ஒட்ட மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. பின்னர் போஸ்டர்கள் ஒட்டும் சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.இந்நிலையில் தற்போது இப்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால் இங்கும் ஏதேனும் கலை ஓவியங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...