கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. போதைப்பொருள் தடுப்பு, சமூக வலைதள கண்காணிப்பு, கல்லூரி மற்றும் விடுதி பாதுகாப்பு, மாணவர்களின் வருகை தொடர்பான மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Coimbatore: கோவை மாநகர காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல், மாணவர்களிடையேயான மோதல்களைத் தவிர்த்தல் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ‘EDUCATION FIRST’ என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1789229990882
இதன் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள Police Liaison Officers-க்கான கலந்தாய்வுக் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர் Dr. N. கண்ணன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், Police Liaison Officers தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருந்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.
1789229993223
மாணவர்களை நல்வழிப்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் மற்றும் குழு மோதல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியிலும் Social Media Monitoring Cell ஏற்படுத்தி, மாணவர்கள் தொடர்பான சமூக வலைதளப் பிரச்சினைகளை கண்காணித்து, தேவையான தகவல்களை காவல்துறையுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கல்லூரிகளில் செயல்பட்டு வரும் Anti-Drug Club-களுடன் Police Liaison Officers ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாணவர்கள் தொடர்பான போதைப்பொருள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பெற்று, அவற்றை காவல்துறையுடன் ஒருங்கிணைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களின் வருகைப் பதிவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், தொடர்ந்து கல்லூரிக்கு வராத மாணவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து கண்காணிக்கவும், தேவையான தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கல்லூரி வளாகங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநபர்கள், முன்னாள் மாணவர்கள் அல்லது கல்லூரியுடன் தொடர்பில்லாத நபர்கள் வருகை தருவது அல்லது தங்குவது குறித்தும் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள College Nodal Officer-உடன் Police Liaison Officer தொடர்ந்து தொடர்பில் இருந்து, மாணவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெற்று, அதன் அடிப்படையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெற்றது.
‘EDUCATION FIRST’ திட்டத்தின் நோக்கம் மாணவர்களை குற்றவாளிகளாக கருதுவது அல்ல என்றும், அவர்கள் குற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதையும், குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பதையும், போதைப்பொருள் மற்றும் சமூக விரோத செயல்களில் சிக்காமல் இருப்பதையும் உறுதி செய்து, பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான கல்விச் சூழலில் பயில்வதற்கான சூழலை உருவாக்குவதே நோக்கம் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் மாணவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருள் இல்லாத, வன்முறை இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் (வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து), அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...