கோவை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் - 3562 வழக்குகளுக்கு தீர்வு

நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் ஆகியவற்றுக்கு தீர்வுகாணப்பட்டது.


கோவை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்புமிகு G.விஜயா அவர்கள் வழிகாட்டுதலின்படி இன்று 09.03.2024 காலை 10.30 மணியளவில் கோவை நீதிமன்றங்களிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் (பொறுப்பு) M.N.செந்தில்குமார், Special Judge, Special Court Under TNPID Actதுவக்கி வைத்தார்கள். தொடர்ந்து, மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மதன்குமார் என்பவருக்கு ரூபாய் 90,00,000/- காசோலையாகவும், மற்றொரு மோட்டார் வாகன விபத்தில் இறந்த நபரின் மனைவி ரபிஅம்மாள், அவருடைய குழந்தைகள் மற்றும் கணவரின் பெற்றோர் ஆகியோருக்கு ரூபாய்.25,74,000/- அவர்களுக்கு இழப்பீடு காசோலையினை வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார்.

இம்மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்) மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள் மற்றும் கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் (Pre-Litigation) ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 3562 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.



இதன் மொத்தத்தீர்வு தொகை ரூ.58 கோடியே 77 இலட்சத்து 66 ஆயிரத்து 444 /- (Rs.58,77,66,444/-) ஆகும். மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 07 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் 419 தீர்வு காணப்பட்டது. காசோலை வழக்குகள் 260 தீர்வு காணப்பட்டது.

இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், S.கோவிந்தராஜ், A.S.ரவி, A.முரளிதரன், G.நாராயணன், G.குலசேகரன், A.P.லதா,தலைமை நீதித்துறை நடுவர் C.ராஜலிங்கம், சார்பு நீதிபதிகள் M.நம்பிராஜன், P.K.சிவகுமார், S.மோகனரம்யா மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 15 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், தாலுக்கா அளவில் கூடுதல் மாவட்ட நீதிபதி N.சுந்தரம் சார்பு நீதிபதிகள் G.கங்காராஜ், P.மோகனவள்ளி, P.கௌதமன், C.B.வேதகிரி, B.S.கலைவாணி மற்றும் உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்டம் முழுவதும் மொத்தம் 25 அமர்வுகள் மூலம் இம்மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

மேலும், தேசிய மக்கள் நீதிமன்றம் சிறப்பாக நடைபெற உதவிய கோவை மாவட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவல் துறையினர், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...