தாராபுரம் அருகே தேர்பாதை பகுதியில் உள்ள மதுபான கடை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பாதை என்ற இடத்தில் உள்ள மதுபான கடை 38 30 இந்த கடை கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.



தேர் பாதை தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடை போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த பகுதிக்கு வருகை புரிந்த போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருகிறேன் என உத்தரவளித்ததின் பேரில் அப்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர் பாதையில் உள்ள 3830 என்ற மதுபான கடை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் இந்த கடை மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மோளரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று இரவு எங்களது பகுதிக்கு மதுபான கடை வேண்டாம் எனக்கோரி இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து இன்று தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...