கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.1) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.



இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.

எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...