உருமாண்டம்பாளையத்தில் பாழடைந்து கிடக்கும் மயானத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை

உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை அங்குள்ள மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோவை: கோவை உருமாண்டம்பாளையத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஊருக்குள் இறக்கும் அனைத்து ஜாதியினரும் புதைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் எரியுட்டும் மேடையும் உள்ளது. இந்தநிலையில் உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை இந்த மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



தற்போது இந்த மயானத்தில் சுமார் 5 அடிக்கும் மேலாக விஷ செடிகள், முற்கள், புல்கள் வளர்த்துள்ளன. மயானத்தின் தண்ணீர் பைப்புகள், மின்சார விளக்குகள் சரியாக வேலைகள் செய்யவில்லை. சவ வண்டிகளும் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளன.

இதேபோல வெள்ளகிணர் மயானமும் பாழடைந்து காணப்படுகின்றன. அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக பொதுகழிப்பிடம் இருந்தும் கழிப்பிடம் செல்லாமல் மயானத்திற்கே வருகின்றனர். மேலும் இந்த மயானம் கேட் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வழிப்பாதையும் சரியாக இல்லை, பல நேரங்களில் இரவு நேரத்தில் தான் இறப்பவர்களை புதைக்க கொண்டுவருகின்றனர். இங்கு பாம்பு, பல்லிகள் அதிகம் சுற்றுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல உள்ள அனைத்து மயானங்களையும் பராமரிக்க வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...