பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைப்பு - கோவை ரயில் நிலையம் அறிவிப்பு

கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 30 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 30 ஆக அதிகரிக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் இந்த கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரயில்களின் இந்த கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போன்று பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, கண்ணனூர், உள்ளிட்ட இடங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கோவை மேட்டுப்பாளையம் பாஸஞ்சரில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் இடையே எங்கு ஏரி இறங்கினாலும் ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு காலை ஐந்தே கால் மணிக்கு மற்றும் மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...