பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் – கோவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சற்றுமுன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியாதவது, 'தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, ஏற்படுத்திய பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது.

இதில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக அரசியலில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவிற்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக இது இருக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேராதரவும் அன்பும் கிடைத்துள்ளது.



பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் இயலாமையையும், ஊழல்களையும் மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளோம். இதன் நிறைவு விழா பாரதப்பிரதமர் தலைமையில் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் மிக அதிகமாகியுள்ளது. குறிப்பாக கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தலில் திமுக நிர்வாகி ஈடுபட்டிருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் மற்றும் பலர் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...