தாராபுரத்தில் ரூ.12.50கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாளை திறப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தின் இறுதி கட்ட பணிகளையும், கல்லூரி ஆய்வகங்கள், காணொலி காட்சி மன்ற கூடங்கள் மற்றும் கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த ஓராண்டு ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட அரசு சுமார் ரூ.12.50 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பணிகளை நிர்ணயித்த ஓராண்டு காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டார்.



இதன் கட்டுமான பணிகளுக்கு கடந்த டிச 23,ந் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து ஐ.டி.ஐ வளாகத்தில் பணியை தொடங்கி வைத்தனர்.

அதன் முதற்கட்டபணி தொடங்கி வைத்தார். தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணி நடைபெற்று வருகிறது.

அரசு கலைக் கல்லூரி கட்டிடம் நிரணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

அதன் இறுதி கட்ட பணிகளையும் கல்லூரி ஆய்வகங்கள், காணொலி காட்சி மன்ற கூடங்கள் மற்றும் கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இனறு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி, தாசில்தார் கோவிந்தசாமி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...