தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் தாண்டி, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே வளாகங்களில் உள்ள 25000 வோல்ட் மின்சக்தி அமைப்புகளின் அருகில் செல்வதால் மின்சாரம் தாக்கி விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. 2017ம் ஆண்டில், சேலம் மார்க்கெட் ரயில்நிலையம் மற்றும் மேட்டூர் அணை ரயில்நிலையங்களில் இத்தகைய இரு மின்விபத்துக்களில் இருவர் சிக்கி மின்அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

எனவே, இத்தகு விபத்துகளை தவிர்க்கவும், ரயில்வே மின்அமைப்புகளின் அருகில் செல்வதில் உள்ள அபாயத்தை விளக்கியும், சேலம் கோட்ட மின்பிரிவு 28.03.2017 முதல் 31.03.2017 வரை மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (28.03.2017) காலை சுமார் 10.00 மணியளவில் சேலம் கோட்ட அலுவலகத்தில் இருந்து மின்பாதுகாப்பு பிரச்சார ஊர்தியை (பாதுகாப்பு ரதம்) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இப்பிரச்சார ஊர்தி மூலம் சுமார் 1,00,000 பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 2500 கேலண்டர்களை விநியோகிக்கவும், பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 1000 ஜியோமெட்ரி பாக்ஸ்களை பள்ளிக்குழந்தைகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...