உடுமலை அருகே புத்தர் கோவில் கட்ட இடையூறு- மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர் நேரில் ஆய்வு

புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது என புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சிலர் அந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களிடம் கடந்த மாதம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுமானபணிகள் தடை படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் கூறியதாவது, புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்து கட்டுமான பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் பிக்கு மெளரியா புத்தா நிலையமுத்தூர் அருகில் புத்தர் கோவில் பார்வையிட்டால் அப்போது புத்தர் கோவில் கட்டுவதில் இடையூறாக இருப்பதாக மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு வந்த நிலையில் இன்று ஆய்வுக்கு வந்துள்ளோம்.

இங்கு வந்து பார்த்தபோது கோவில் கட்டுவதற்கு இடையூறு இருப்பதாக தெரியவில்லை. கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...