சசிகுமார் கொலையில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்கள் துண்டு பிரசுரங்களில் வெளியீடு

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யபட்டார். 

இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக சசி குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் விசாரணை செய்த போலீசார் அதில் சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.  

தொடர்ந்து, தங்களுக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று அப்புகைப்படத்தில் இருந்த நபர்கள் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் வந்து ஒப்புதல் கொடுத்தனர். இதன் பின்னர், கொலை வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சசிகுமார் கொலை தொடர்பாக தேடப்பட்டுவரும் நபர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி.  போலீசார் வெளியிட்டனர். இதுவரை துப்பு ஏதும் கிடைக்காததால் தற்போது தேடப்படும் நபர்களின் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பில், கோவை சாய்பாபா காலனி பகுதிய சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரது மகன் முபாரக் (37) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்பவரது மகன் சதாம் உசேன் (25) ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

பொதுமக்களுக்கு இந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளும்படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

( தொலைபேசி எண்கள் : 9498104409 / 9498174230 / 0422-2241752 / 044-28512510 )

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...