கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஜூம்பா நடனம் சுவாச பிரச்சனை, மன அழுத்தம், செரிமான பிரச்சனை, உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக்கம் ஆகியவற்றிற்கு நன்மை அளிக்கும் என்பதால் காவலர்களுக்கு இந்த நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வாரம்தோறும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் காவலர்களுக்கு உடல்சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுகிறது.



அந்த வரிசையில் புது முயற்சியாக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.



ஜூம்பா நடனம் சுவாச பிரச்சனை, மன அழுத்தம், செரிமான பிரச்சனை, உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக்கம் ஆகியவற்றிற்கு நன்மை அளிக்கும் என்பதால் காவலர்களுக்கு இந்த நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.



முதல் நாள் வகுப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் வரும் நாட்களில் இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் இந்த நடன பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...