உலக வானொலி தினத்தைமுன்னிட்டு பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. சமுதாய வானொலியில் 13 மணி நேரம் நேரலை

இன்று 13 வது வானொலி தினத்தைமுன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 13 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்று பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்தார்.


கோவை: ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை அதிகரித்து உள்ள இந்த காலத்திலும் வானொலி கேட்கவும், ஒரு கணிசமான மக்கள் கூட்டம் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை வானொலிகளை போலவே, சமுதாய வானொலிகளும் மக்களிடம் நீங்கா இடம் பெற்றுள்ளன. விளம்பரம், சினிமா, செய்திகள் இல்லாத இந்த சமுதாய வானொலிகள் சமுதாயம் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருந்து பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வானொலி, காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையும் ஒலிபரப்பு செய்து வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி, சமுதாயம் சார்ந்த தகவல்கள், மக்கள் பயன்பெறும் வகையிலான விபரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் உள்ளிட்டவை ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த வானொலியை அப்பகுதியை சுற்றி 10 கி.மீ. தொலைவிற்குள் உள்ள மக்கள் கேட்க முடியும்.



இன்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு இன்று 13 மணி நேரம் தொடர் நேரலை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் சந்திரசேகரன் கூறுகையில், “இந்த சமுதாய வானொலி 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. 16 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது.



8 வயது முதல் 80 வயது வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வானொலி இயங்கி வருகிறது. ரேடியோ ஹப் என்ற பெயரில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சமுதாய வானொலியில் பங்களிப்பு செய்ய வைத்து வருகிறோம். நாங்கள் நடத்திய ஆய்வில் 24.4 % பேர் இந்த வானொலியை கேட்கின்றனர் என்பது தெரியவந்தது.

யார் ரேடியோ கேட்கிறார்கள்? என்ற நிலை மாறி அனைத்து இடங்களில் ரேடியோ கேட்கும் நிலை உள்ளது. ஏராளமானோர் வானொலியை கேட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ”பி.எஸ்.ஜி. சமுதாய வானொலியில் 108 மணி நேரம் 108 பேர் நேரலை செய்தது போன்ற சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இன்று 13 வது வானொலி தினத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 13 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த வானொலி மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆர்.ஜெ. ஆகும் ஆசை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...