வ.உ.சி. மைதானத்தில் கோவை சங்கமம் விழா- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி

கலைத்திருவிழாவில் 20 கலைக் குழுவினரின் நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.


கோவை: கோவையில் தமிழ் மண்ணின் கலைகளைக் கொண்டாடும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் கோயம்புத்தூா் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று (பிப்.10) தொடங்கியது.



கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.

இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.



ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.

மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...