கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தேசியக் கொடியேற்றி, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திரதின பேருரை வழங்கினார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா 15.08.2026 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.






துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திர தின விழாப் பேருரை வழங்கினார். அவர் தனது உரையில், "இந்திய இளைஞர்களின் உழைப்பும், பொறுப்புணர்வும் உலக அரங்கில் உயர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இதற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்றும் மறவாமல் போற்றப்பட வேண்டும். அதன் வெளிப்பாடாக, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் உறுதி கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




கற்பகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயலர் க. முருகையா, பதிவாளர் முனைவர் பீ. வீ. பிரதீப், தேர்வாணையர் முனைவர் ப. பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், NCC, NSS மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்புக்காகப் பாராட்டுப் பெற்றனர். முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் விழாவில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...