தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை

தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 49க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணி குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அப்போதுதான் நாளடைவில் அவர்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பார்கள். அப்போது உங்களுடைய பணி சுமையும் குறையும், குப்பைகளை கையாளுவதில் உள்ள சிரமமும் தவிர்க்கப்படும் என அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...