கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்தி நிறுத்திய மத்திய பாதுகாப்பு படையினரால் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதியை வழியனுப்ப வந்த அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். மும்பையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் கிளம்பினார்.

அப்போது கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.



இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அமைச்சர் யார் என்று கூறத் தெரியாமல் பாதுகாப்பு பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.



இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பிவைத்து திரும்பினார். பின்னர் சம்பவம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு படையினர் சரியாக கவனிக்காமல் இருந்து விட்டனர் எனவும், அதே சமயம் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதால் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...