மின் கட்டண உயர்வை திரும்பெறுமாறு கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கோரிக்கை

வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முனைப்பு காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுகுறு தொழில் முனைவோரை சந்திக்காமல் இருக்கிறார் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசாங்கத்தின் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசாங்கத்தின் மின்சார வாரிய துறை, தொழில்துறை பயன்படுத்தும் மின் கட்டணத்திற்கான மின் கட்டணத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உயர்த்தினர். பீக் ஹவர் சார்ஜ் 15 % , நிலை கட்டணம் ரூபாய் 3920-லிருந்து, ரூபாய் 17200 உயர்த்தினர்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் முதலீடு செய்து அமைத்த சோலார் மின்சாரம் தயாரிப்புக்கு ரூ.1.53 கட்டணம் விதித்து, சில மாதங்களுக்கு முன் அவைகளை நடைமுறைபடுத்தினர். இது தொழில் துறைக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது. இதனை கண்டித்த தொழில் துறை முனைவோர், தமிழ்நாடு அரசாங்க அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர்.

இந்த நிலையிலே, சிறுகுறு தொழில் முனைவோர் கடும் தொழில் நெருக்கடியில் இருந்து நீங்காது இருப்பதனால், தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், தமிழ்நாடு முழுவதும் இதுவரை எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதில் பீக் ஹவர் சார்ஜ் 15 % தற்காலிக ரத்து செய்த தமிழ்நாடு அரசாங்கம், ஃபிக்சுடு சார்ஜை ஸ்மார்டு மீட்டர் பொறுத்திய பின்னர் நடைமுறைபடுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் முதலீடு செய்து அமைத்த சோலார் மின்சாரம் தயாரிப்புக்கு விதித்த 1.53 பைசா கட்டணம், 50 % குறைத்து அறிவிப்பு வெளியிட்டனர்.



ஆனால் தொழில் துறை நெருக்கடியிலிருந்து மீளவில்லை. இதனால் தொழில் முனைவோரது போராட்டம் முடிவின்றி தொடர்ந்தன. ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு மின் கட்டண உயர்வுகள் திரும்ப பெறவில்லை. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான தொழில் துறையினர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செயல்பட ஆரம்பித்திருக்கின்றனர்.

கோயம்புத்தூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், தொழில்துறை சந்திக்கும் பல்வேறு நெருக்கடி நிலைகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 13 லட்சம் சிறு குறு தொழில் முனைவோரை கொண்ட தமிழ்நாடு தொழில்துறை, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 கோடி நபர்களுக்கான வேலைவாய்ப்பை தந்து வருகின்றது.

தொழில் வளர்ச்சியில் சிறு குறு தொழிலின் பங்கு பெருமளவில் இருக்கின்றன. இந்த நிலையிலே, தமிழ்நாடு அரசாங்கம் உயர்த்திய தொழில் துறை பயன்பாட்டுக்கான பிக் ஹவர்ஸ் எனும் பரபரப்பு கட்டணம், நிலை கட்டணம், சோலர் உற்பத்தி கட்டணம் உள்ளிட்ட மின்சார கட்டணம் கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பிலெ, தமிழ்நாடு முழுவதும் எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

ஆனால் இதுவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கவும் முதல்வர் முனைப்பு காட்டும் நிலையில், சிறுகுறு தொழில் முனைவோரை சந்திக்காமல் இருக்கின்றார். உடனடியாக சிறுகுறி தொழில் முனைவோரை சந்தித்து, தமிழ்நாடு சிறு குறு தொழில் முனைவோர் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து, வருகின்ற தமிழ்நாடு அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

ஒருவேளை பட்ஜெட்டில் தங்களின் எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசு தரப்புக்கு தொழில்துறை சார்பாக ஆதரவு தரப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் எக்கனாமி என்ற நிலையில் தமிழ்நாடு தொழில் துறை உலக அளவில் உயர முனைப்பு காட்டுகின் முதலமைச்சர், இதில் 25 சதவீத பங்களிப்பினை தரும் வல்லமை படைத்த தமிழ்நாடு சிறு குறு தொழில் துறையை தூக்கிவிடும் விதமாக, சிறு குறு தொழில் முனைவோர் தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...