நீலகிரி மாவட்டத்திற்கு அழகிய ஆபத்து.!



நீலகிரி மாவட்டத்திற்கு அழகிய ஆபத்து.!

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் வரப்பிரசாதமாக அமைந்தது நீலகிரி மாவட்டம். மொத்தம் நான்கு ஒன்றியங்கள் மற்றும்  21 பேரூராட்சிகள்  கொண்ட இம்மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் பசுமை. 

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நீலகிரி குறித்து குறிப்பிடப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம் வெகுவாக புனரமைக்கப்பட்டது. அதன் பின்னர், உதகை உலகறிந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றானது. 

மலைக்காடுகள் அதிகமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது அந்நிய விதைகள் அதிக அளவில் பரவி வருகின்றன. இந்த விதைகள் நம் பாரம்பரிய சோலைக் காடுகளை அழித்து, அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருகின்றன. 

நம் நாட்டின் மண் வளத்தை கெடுக்க அண்டை நாடினாரால் திட்டமிட்டு விதைக்கப்பட்ட விதையாக கூறப்படும் சீமை கருவேல மரத்தை பற்றி நாம் அனவரும் அறிந்திருப்போம். இதே போல நீலகிரி மாவட்டத்திலும் ஓர் ஆபத்து விரைவாக பரவி வருகிறது. ஸ்காட்ஸ் ப்ரூம் என்ற ஒருவகை தாவரம் தான் அந்த அழகிய ஆபத்து. சீமை கருவேல மரத்தைப் போல களையெடுக்க வேண்டிய களைச்செடிகளுள் இதுவும் ஒன்று என்கின்றனர் சூழல்வாதிகள்.  




மஞ்சள் நிற பூக்கள், அடர்ந்து பரவும் தன்மை, காண்பவரை கவரும் அழகு இத்தகைய பண்புகளை பெற்றிருக்கும்  ஸ்காட்ஸ் ப்ரூம் செடியின் ஆபத்து குறித்து பலருக்கு தெரிவதில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக தங்க தொடங்கினர். அப்போது அவர்கள் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்த ஒருவகை அலங்காரச்செடி தான் இந்த ஸ்காட்ஸ் ப்ரூம். மாளிகைகளின் வாசல்களில் அழகுக்காக நடப்பட்ட்ட இந்த செடி நாளுக்கு நாள் பரவி இன்று நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளை மிக வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன.

ஆபத்து

இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடி புல் மலைகளில் முளைக்கும் போது அருகில் வேறு எந்த செடி வகைகளும் வளராது. இதனால் புட்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மான் போன்ற உயிரினங்களுக்கு உணவு இல்லாத நிலை ஏற்படுகிறது. 

காட்டிற்கு எவ்வகையிலும் உதவாத இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடிகள் சோலைகளை சிறிது சிறிதாக அளித்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் மழை பொழிவு குறைகிறது. 



aபவானி நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, லக்கடி, மற்றும் அப்பர் பவானி ஆகிய இடங்களில் இந்த செடிகள் அதிகம் பரவியுள்ள காரணத்தால் மழை பொழிவு கணிசமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே சீகை, கற்பூரம், சவுக்கு மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் புல் மலைகளை ஆக்கிரமித்து வந்த வேளையில் வனத்துறை அவற்றை அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில்  இந்த ஸ்காட்ஸ் ப்ரூம் செடி வகைகளும் களையெடுக்கப்பட வேண்டியவையே என்றும், வறட்சி காலத்தில் எந்த தாவரங்கள் வாடும்போதும் இவ்வகை செடிகள் மண்ணில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் என்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...