ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலைஞர் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசை கண்டித்தும் மற்றும் தி.மு.க அரசு கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயத் தொழிலாளர்களுக்கு தற்போது உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து 1996-2001ஆம் ஆண்டு முடிய இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (MGNREGA) வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலவையில் உள்ள கோரிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...