கோவையில் மருதமலை தைப்பூச திருவிழா சிறப்பாக நடக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கோவை மருதமலை தைப்பூசத்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற, அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மேலும் 25ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இவ்விழா, 28 வரை நடைபெற உள்ளது. இதேபோல், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிப்.28ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (ஜன.19) நடந்தது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது, கோவை மருதமலை தைப்பூசத்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற, அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போக்குவரத்து நெறிமுறைகளை தெரியப்படுத்த வேண்டும். போதிய எண்ணிக்கையில் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மொபைல் டாய்லெட் வசதி, குடிநீர் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும்; தேவையான பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். தேர்த்திருவிழா துவங்கும் முன், திருத்தேரின் சக்கரங்கள் மற்றும் தேர் வடம் ஆகியவற்றின் உறுதி தன்மையை பரிசோதித்து, தேர் இயங்குவதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வன விலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பக்தர்கள் வழிபாடு செய்ய போதிய பாதுகாப்பு வழங்கவும், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி சப்ளை செய்யவும், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை சரிவர கண்காணிக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக நிறுத்தியிருக்க வேண்டும். முதலுதவி அளிக்க டாக்டர்களுடன் மருத்துவ முகாம் செயல்பட வேண்டும். தேர் செல்லும் பாதையில் மேடு, பள்ளம் இருந்தால், செப்பனிட வேண்டும். தேர்த்திருவிழா நடைபெறும் பிப்., 28 அன்று, நகர பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை மாற்று வழித்தடங்களில் அனுப்ப வேண்டும். மாநகராட்சி, காவல்துறை, கோவில் நிர்வாகம், மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்சினி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...