பேரூராட்சி தேர்தலில் கூட ஆளுநர் வெற்றி பெற முடியாது - கோவையில் ஜவாஹிருல்லா பேட்டி

அனைத்து மத வழிபாட்டு தளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


கோவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வரும் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரால், பேரூராட்சி தேர்தலில் நின்று கூட வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கோவை குனியமுத்தூரில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய ஜவாஹிருல்லா, அனைத்து மத வழிபாட்டு தளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் ஆறாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக், கட்சிகள் அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மத்திய அரசின் திசையை மாற்றும் தேர்தலாக இருக்கும் எனக் கூறியவர், இந்தியா கூட்டணி ஏற்கனவே மூன்று முறை ஒன்று கூடி ஆலோசித்துள்ளது. இந்தியா கூட்டிணியை மேலும் வலுப்படுத்த காங்கிரஸ் பிற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக காட்சிகள் அரங்கேற்றப்படுவதாகவும், இதுவரை மத்திய அரசுக்கு எதிரான எந்த கருத்தையும் எடப்பாடி பழனிச்சாமி முன் வைக்கவில்லை என கூறினார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தாங்கள் ஆதரிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகள் 20 பேரை நீண்ட விடுப்பில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஆளுநர் அந்த கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரும் சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும் ஆளுநரால், ஒரு பேரூராட்சி தேர்தலாவது நின்று வெற்றி பெற இயலுமா என கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் யார் படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நீட் தேர்வின் நிலை குறித்து பொது மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...