இந்திய கலாச்சாரத்தை விரும்பும் பிரெஞ்ச் மாணவிகள் - கோவையில் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட்டம்

கோவையில் தீபாவளி கொண்டாடிய “ரீயூனியன்” பிரெஞ்ச் பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய கலச்சாரம், பாடமுறைகள் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களது தீவில் 30 சதவீதம் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் இருப்பதால் உணவு முறைகளில் பெரிய மாற்ற இல்லை என்றனர்.


கோவை: இந்திய கலாச்சாரம் குறித்து கற்று கொள்ள கோவை வந்த பிரெஞ்சு தீவு மாணவர்கள் உற்சாகமாக தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் “ரீயூனியன்” (Reunion) தீவில் இருந்து வந்த 8 மாணவ, மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள், இந்திய கலச்சாரம், மற்றும் பாடமுறைகள் குறித்து கடந்த 10 நாட்களாக கற்று வருகின்றனர்.



இறுதி நாளில் கோவை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ரீயூனியன்( Reunion) தீவு பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் உண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.



இவர்களது அழைப்பை ஏற்று கோவையில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் விரைவில் ரீயூனியன் (Reunion) தீவிற்கு செல்ல உள்ளனர்.

இது குறிந்து ரீயூனியன் பள்ளி மாணவிகள் கூறும் போது : தங்கள் தீவில் முழுமையாக பிரெஞ்சு முறை பாடதிட்டமே பின்பற்றபடுவதாகவும், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பாட நேரத்தை விட தங்கள் தீவில் கூடுதல் நேரம் பள்ளி செயல்படுவதால் வீட்டு பாடங்கள் செய்வதில் பெரும் சவாலான சூழல் உள்ளது.

இந்திய பாடமுறை, அனைவருக்கு சமமாக சீருடை போன்ற விஷயங்கள் தங்களை கவர்ந்துள்ளது. தங்களது தீவில் 30 சதவீதம் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் இருப்பதால் உணவு முறைகளில் பெரிய மாற்ற இல்லை, ஆனால் காரம் சற்று கூடுதலாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் இந்த வாய்ப்பு மூலம் பல்வேறு புதிய விஷயங்களை தாங்கள் கற்றாக்கொண்டதாகவும் தெரிவித்தனர். அதே போல இந்திய மாணவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...