கோவையில் மழை நீர் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும், லங்கா கார்னர் மேம்பாலம் கிக்கானிக் மேம்பாலத்திற்கு அடியிலும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையில் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பல்வேறு பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.



அதன்படி கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தனர்.



அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



அதனைத் தொடர்ந்து மருதமலை பகுதி ஐஓபி காலணியில் மழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு அதனை சரி செய்யும் பணிகளை விரைவுப்படுத்திட அறிவுறுத்தினர்.



அதனைத் தொடர்ந்து செல்வபுரம் பகுதி அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து முழங்கால் அளவிற்கு வெளியேறியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.



அப்பொழுது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளை காண்பித்து மழைநீர் வெளியேறுவதற்கான காரணங்களை சுட்டி காட்டினார்.

அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை விரைவு படுத்திடவும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...