உடுமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி வரும் அவலம் - பாதை அமைத்து தரக்கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை ஈசல்தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவட்டப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகள் வனத்துறை, வருவாய் துறை,தன்னார்வலர்கள் சார்பில் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ஆனால் இன்றளவும் பாதை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி அடைவதற்கு வழிவகை பிறக்கவில்லை. இதனால் பிரசவம்,அவசரகால உதவி, விபத்து, ஏதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற்றால் சிகிச்சைக்கு அடிவாரப் பகுதிக்கு வருவதற்குள் மலைவாழ் மக்கள் மறு ஜென்மம் எடுத்து விடுகின்றனர்.



பாதை வசதி இல்லாததால் உயிரைக் காக்க உயிரை பணயம் வைத்து நோயால் பாதிக்கப்பட்ட நபரை அடர்ந்த வனப்பகுதிக்குள் தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

பின்னர் வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு பாதை வசதி அமைப்பதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்குவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை தேவையான பாதை வசதி பூர்த்தி அடைந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த ஒரு தேவையும் காலத்தே செய்து கொள்ள இயலும். எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...