கவுண்டம்பாளையத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிய ஆட்சியர்

கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கவுண்டம்பாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு கிடங்கு வளாகத்தையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மூவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.



பின்னர் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட வளங்கள் அலுவலர் குணசேகரன், வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...