வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வட மாநில சிறுவன் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

தேயிலை தோட்டத்தில் பதுங்கிருந்து வந்து சிறுத்தை தாக்கியதில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த வடமாநில சிறுவனுக்கு, கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்தினற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வட மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் எல் டி டிவிஷனில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சய் ஓரம் இவரது மகன் பரிதீப் வயது ஏழு இவர் தனது வீட்டில் சுமார் ஆறு முப்பது மணி அளவில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலைத்தோட்டத்தில் இருந்து சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியது.

தாக்கி தேயிலைத்தோட்டத்தில் இழுத்துச் செல்ல முயற்சித்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதில் சிறுத்தை சிறுவனை விட்டு தேயிலை தோட்டத்தில் ஓடியது. சிறுவனை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.



சிகிச்சையில் தலை மற்றும் கால் கை போன்ற இடங்களில் சிறுத்தையின் பல் மற்றும் நகங்கல் கீரல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. சிறுவன் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த வால்பாறை சரகர் வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



மேலும் பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்திற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...