அனுமதியை பெறாமல் தோண்டப்பட்டுள்ள குழிகள் - நிலத்திற்கு சொந்தமான மூதாட்டி துடியலூர் காவல்நிலையத்தில் புகார்

பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் எந்த இழப்பீடும் வழங்காமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தனது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சியில், சி ஆர் பி எப் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திடிரென குழிகள் தோண்டப்பட்டுள்ளது.



இந்த நிலத்தில் ஆர்ஜிதம் செய்வதற்கு சாவித்திரி அம்மாளுக்கு இதுவரை முதற்கட்ட நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் இவருக்கு இழப்பீடு தொகையோ, அல்லது இழப்பீடு கொடுத்து விடுவோம் என்ற எந்த அத்தாட்சியும் இல்லாமல் இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை உடைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியுள்ளனர்.

இதற்கு செயற்பொறியாளர் செந்தில் குமார் என்பவர் தான் காரணம் என்றும் அவர் மீதும் பில்லூர் ஒப்பந்ததாரர்கள் மெகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் மீதும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு அவர்கள் பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசும்போது டிசம்பர் மாதத்திற்குள் முதலமைச்சர் மூலம் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப் பட உள்ளதால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி அவர்களது நிலத்தில் குழி தோண்டியதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...