குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டும் - கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

நீண்ட்நாட்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


கோவை: குப்பைகளை அகற்றக் கோரியும் தீ வைப்பதை தடுக்க கோரியும் நீலிகோணாம்பாளையம் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்

கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.



இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...