கோவையில் குடிநீர் பிரச்சனை - மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொள்ளாச்சி ஜெயராமன் மனு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்திய போது அவர்களுக்கு இனித்தது. இப்போது கசப்பாக இருக்கிறதா? உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று மாலை கோரிக்கை மனுவை அளித்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆறு மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார் கிராமங்களுக்கு போதுமான தண்ணீர் வருவது இல்லை. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.

அதன் காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டிருக்கிறேன். விரைவில் தீர்வு காண வேண்டும். நடவடிக்கை இல்லை என்றால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.

மேலும் குடிநீர் திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 71 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். புதுப்பித்த திட்டத்தின் தண்ணீர் வரவில்லை எனவும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் ஆளுங்கட்சி பழிவாங்குகிறதா என தெரியவில்லை. ஆளுங்கட்சியின் கைக்கூலியாக போலீஸ் செயல்படுகிறது.

நெகமம் அடுத்த குள்ளக்காபாளையம் கிராமத்தில் உண்மையான நெசவாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலம் வேலை கிடைக்காத போதும், நெசவாளர்களாக இல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென போட்டிபோட்டுக் கொண்டு திமுகவினர் வந்து மிரட்டுகிறார்கள். எதிர்க்கட்சியின் தொகுதி என்பதால் பழிவாங்க கூடாது.

பொதுப்பணித்துறை அமைசசர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வருமான வரித்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்திய போது அவர்களுக்கு இனித்தது. இப்போது கசப்பாக இருக்கிறதா? உப்பைத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என விமர்சித்தார்.

மேலும் திமுக ஆட்சி லஞ்ச உழலில் திழைத்துக் கொண்டிருக்கிறது. எங்க எடுத்தாலும் எதற்கெடுத்தாலும் லஞ்சம். இதுதான் திமுகவின் ஆட்சியின் நிலைமை. விரைவில் இது மாற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...