தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 06.11.2023 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 06.11.2023 அன்று நடைபெற உள்ளது.

உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெறும் விதம்: நேரடி கலந்தாய்வு உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ள நிபந்தனைகள்: உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் மற்றும் உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை (Sliding System) கிடையாது.

உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ளலாம்? பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஏற்கனவே கலந்து கொள்ளதாவர்கள். கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பினை தவற விட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு கல்லூரியில் சேராதவர்கள் கலந்து கொள்ளலாம். உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ள கூடாது? மாணவர் சேர்க்கை பெற்று இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள்கலந்து கொள்ளகூடாது.

உடனடி மாணவர் சேர்க்கைக்குரிய கட்டணம்: பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் SC/SCA/ST பிரிவு ரூபாய். 100/- மற்றும் இதர பிரிவினர் ரூபாய். 200/செலுத்த வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்று பின்பற்ற வேண்டியவை.

உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையின் போது இணைப்புக் கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக் கல்லூரிகளிடம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான தொலைபேசி எண்கள் தகவல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கஎண். 5 to 7 தகவல் கையேடு 2023 (Diploma Information Brochure 2023), இணையதள முகவரிhttp://tnagfi.ucanapply.com). உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப் பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

உடனடி மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும். தரவரிசையின் மற்றும் சாதிய அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டயப்படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம், உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை கட்டணமான ரூபாய்.5,000/- தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம்.

பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. உடனடி மாணவர் சேர்க்கைக்கான(Spot Admission) காலியிடங்களுக்குரிய அட்டவணை 05/11.2023 அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 9488635077, 9486425076 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...