கோவை மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கூட்டம் - முகம் சுழித்து கொண்ட கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனைமலை பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதால் இன்று நடைபெறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பங்கேற்கவில்லை.


கோவை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படுகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். வழக்கமாக இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனைமலை பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.



இதனால் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாதது குறித்து முகம் சுழித்து கொண்டனர்.



முக்கியமான கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளாதது கண்டனத்திற்குரியது என்பது போல் பேசினர்.



அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஆனைமலை பகுதியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஷெட்யூல் செய்துள்ளதால் அவர் இதில் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார். இருப்பினும் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாததால் தங்களுடைய கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார்கள் எனவும் தங்களது தேவைகளை யாரிடம் கூறுவது எனவும் கோபித்துக் கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...