சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு கேது இடப்பெயர்ச்சி விழா - பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் என்ற இடத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் நேற்று ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் ,கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராகு கேது இடப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு யாகத்தில் பங்கேற்று, ராகு மற்றும் கேது பகவானின் பாதங்களுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு சென்றனர்.

சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு-கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30 ம் தேதி திங்கட்கிழமை மாலை 4.37 மணிக்கு பெயர்ச்சி ஆகின. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கு பெயர்ச்சியானார்.



இந்நிலையில் உலகிலேயே நவ கிரகங்களுக்கு என அமைக்கப்பட்ட ஒரே கோயிலான திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் என்ற இடத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் நேற்று ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.



சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், ஒன்பது நவகிரகங்கள், 108 சிவலிங்கங்கள், அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது.



அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராகு கேது பகவான் உற்சவர் சிலைகள் நட்சத்திர குளத்திற்கு கொண்டுவரப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.



பின்னர் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.



திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ராகு கேது இடப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு யாகத்தில் பங்கேற்று, ராகு மற்றும் கேது பகவானின் பாதங்களுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு சென்றனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...