துடியலூர் அருகே கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமியிடம் தூய்மைப்பணியாளர்கள் திடீர் கோரிக்கை

கோவை துடியலூரை அடுத்த பன்னீமடையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வீடுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஊதியம் உயர்த்தி வழங்கக் கோரியும், வீட்டுமனைப் பட்டா வேண்டும் எனவும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.


கோவை: ஊதிய உயர்வு மற்றும் வீட்டுமனைப்பட்டா கேட்ட தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நேற்று நடைபெற்றது.



இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.



அப்போது கோயில் வாசலில் காத்திருந்த பன்னீர்மடை ஊராட்சியில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை என்றும், அதிகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மேலும் குடியிருப்பதற்காக வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதனை கேட்ட அமைச்சர், உடனடியாக ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம் ரத்தினம் மருதாசலத்தை அழைத்து வீட்டு மனைப் பட்டா வழங்க அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து வீட்டுமனை குறித்து பரிசிலினை செய்து உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசிலினை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.



முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அமைச்சர் முத்துசாமிக்கு கோவில் கமிட்டியினர் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.



அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கோயில் கமிட்டியினர், திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...