தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறையினர் சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை கவிதைகளாக கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...