கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கோவை மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரிஅவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33) கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் *கவின் குமார் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்சப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...