உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குருவப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர். இவர் 1942 ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இதன் காரணமாக ஒரு வருடம் வேலூர் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் அலிபரி சிறையிலும் சிறை தண்டனை அனுபவித்தார்.

அதைத் தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1949 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி காலமானார். அவரது தியாகம் மற்றும் நினைவை போற்றும் வகையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குருவப்பநாயக்கனூர், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பிலும் சர்தார் வேலப்பநாயக்கர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.



நிகழ்வுக்கு உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுதுணைத் தலைவர் சண்முகவடிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் தி. செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், அபிராமி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...